

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில் பலர் செல்ஃபி பிரியர்கள்தான். ஆனால் செல்ஃபிகளை பேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும்தான் வெளியிட வேண்டுமா என்ன? செயலி வழியாகவும் செல்ஃபிகளைப் பகிர்ந்துகொள்ளலாம். செல்ப்மீ செயலி இதற்கு வழி செய்கிறது.
இந்த செயலி வழியே செல்ஃபிகளை உடனே பகிர்ந்துகொள்ளலாம். இந்தப் படங்கள் மூலமே உரையாடலாம் என்பதுதான் விசேஷம். படங்களை உங்கள் நட்பு வட்டத்தில் மட்டும் சுருக்கிக்கொள்ளலாம். அல்லது மொத்த உலகுடன் பகிர்ந்து கொள்ளலாம். படங்களுடன் கருத்துகளையும் சேர்த்து வெளியிடலாம் என்பதோடு அவற்றைக் குறிக்கும் ஹாஷ்டேக் பதங்களையும் இணைக்கலாம். இந்த ஹாஷ்டேக் அம்சம்தான் இந்தச் செயலியின் ஸ்பெஷல். ஏனெனில் பலரும் பகிர்ந்துகொள்ளும் ஹாஷ்டேக் அடிப்படையில் இப்போது எந்த வகையான செல்ஃபிகள் டிரெண்டாக இருக்கின்றன எனத் தெரிந்துகொள்ளலாம். இப்போதைக்கு ஐபோனுக்கான செயலியாக அறிமுகமாகி இருக்கிறது.