பிடிஎப் கோப்பாக இ-மெயில்

பிடிஎப் கோப்பாக இ-மெயில்
Updated on
1 min read

முக்கிய மெயில் களாக இருந்தால் சில நேரங்களில் அவற்றை அச்சிட வேண்டியதிருக்கும். இவ்வாறு மெயில்களை அச்சிட்டுக்கொள்வது எளிதானதுதான். ஆனால் காகித வடிவில் இல்லாமல் மெயில்களைக் கோப்பு வடிவில் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் என்ன செய்வது? அதாவது மெயில்களை பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள விரும்பினால், டஃப்பல் பிரவுசர் நீட்டிப்பு சேவை அதற்காக வழிகாட்டுகிறது.

குரோம் பிரவுசர்களுக்கான இந்த நீட்டிப்பு சேவையை டவுன்லோடு செய்துகொண்டு ஜிமெயிலில் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை இன்பாக்சைத் திறற்து மெயில்களைப் படிக்கும்போது, மெயிலின் மேல் பகுதியில் உள்ள டூல்பாரில் டவுன்லோடு எனும் ஐகான் எட்டிப் பார்க்கும்.

அதை கிளிக் செய்தால் பார்த்துக்கொண்டிருக்கும் மெயில் பிடிஎப் கோப்பாக மாற்றப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட மெயில்களை செலக்ட் செய்து அவற்றைக் கோப்புகளாக மாற்றவும் இதே முறையைப் பயன்படுத்தலாம்.

தரவிறக்கம் செய்ய: >https://getduffel.com/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in