USB இணைப்புடன் அறிமுகமாகும் புதிய ரேடியன்ட் கீபோர்ட்

USB இணைப்புடன் அறிமுகமாகும் புதிய ரேடியன்ட் கீபோர்ட்
Updated on
1 min read

USB இன்டர்ஃபேசுடன் கூடிய, புதிய ரேடியன்ட் மல்டிமீடியா கீபோர்டை ஜிப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வழக்கமான USB/PS2 விசைப்பலகை, வயர்லஸ் விசைப்பலகை, மினி விசைப்பலகை, மல்டிமீடியா விசைப்பலகை என பல வகைகள் உள்ளன. புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ரேடியன்ட் விசைப்பலகை கேமர்ஸ் டிலைட் வகையின்கீழ் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த விசைப்பலகை ஹை என்ட் கேமிங் சாதனங்களுடன் கச்சிதமாகப் பொருந்தி வேலை செய்யும் விளிம்பு LED விளக்குகளுடன் கிடைக்கிறது.

ரேடியன்ட் விசைப்பலகையில் USB இன்டர்ஃபேஸ் உள்ளது, இதனை டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினி இரண்டுக்கும் பயன்படுத்தலாம். OTA கேபிளைக் கொண்டு டேப்லட் அல்லது மொபைல் ஃபோனுடனும் இணைக்க முடியும். மிக நவீனமான புதிய டிசைனுடன் கூடிய குறைவாக அழுந்தும் தட்டையான விசைகளைக் (keys) கொண்டுள்ளது. விசைப்பலகையின் நம்பர் பேட் (number pad) பகுதி விசைப்பலகையின் இடது பகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ளது, இதனால் வழக்கமான முழு அளவு விசைப்பலகைகளுடன் ஒப்பிடும்போது, இது மிகச் சிறியதாக உள்ளது. உங்கள் மேசையில் மிகக் குறைந்த இடத்தையே எடுத்துக்கொள்ளும்.

இதில் 12 ஹாட் கீ விசைகளும் உள்ளன. ஃபைல் எக்ஸ்ப்ளோரர், பிரவுசர், மெயில்பாக்ஸ், மியூசிக் பிளேயர், கேல்குலேட்டர் போன்ற அடிக்கடி பயன்படுத்தும் பயன்பாடுகளை எளிதில் திறக்க இவை உதவுகின்றன. மீடியா பிளேபேக்கைக் கட்டுப்படுத்துவதற்கென 7 ஹாட் கீ விசைகளும் உள்ளன.

ரேடியன்ட் விசைப்பலகையின் சில சிறப்பம்சங்கள் -

# USB இன்டர்ஃபேஸ், டெஸ்க்டாப் கணினி மற்றும் மடிக்கணினி என இரண்டு வகை கணினிகளுடனும் இணைக்க முடியும்

# டேப்லட் மற்றும் மொபைல் ஃபோன்களுடன் இணைக்கத் தேவையான OTA கேபிள்

# 106 விசைகள் மன்றும் கூடுதலாக 12 மல்டிமீடியா விசைகள்

# சிறிய அழகான டிசைன்

# பக்கவாட்டில், கண்ட்ரோலர் பட்டனுடன் கூடிய விளிம்பு LED லைட்கள்

# நீடித்து உழைக்கும் 1.5 மீட்டர் கேபிள்

# கேமர்ஸ் டிலைட் வகையில் அறிமுகப்படுத்தப்படுகிறது

ரேடியன்ட் விசைப்பலகை ரூ 699/- இல் கிடைக்கிறது. இதற்கு ஜிப்ரானிக்ஸ் வழங்கும் 1 வருட உத்தரவாதமும் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in