டிஜிட்டல் திருட்டை தடுக்க..

டிஜிட்டல் திருட்டை தடுக்க..

Published on

எல்லா இடத்திலும் தொழில்நுட்பம் வளர்வது ஒரு பக்கம் என்றால், அதை வைத்துக்கொண்டு ஏமாற்று வேலைகள் செய்வதும் அதிகரித்து வருகிறது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கார்டை ஸ்வைப் செய்யும்போது ஸ்கிம்மர் கருவிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் ஏற்கெனவே தெரிந்த திருட்டு.

இப்போது பாக்கெட்டில் இருக்கும் பர்ஸிலிருந்தே நமக்கு தெரியாமல் விவரங்களை திருடும் ஸ்கேனர்களும் வந்துவிட்டது. எனவே இந்த வகை திருட்டை தடுக்க இப்போது அதை தாக்குபிடிக்கும் தொழில்நுட்பம் கொண்ட பர்ஸ்கள் தேவைப்படுகிறது. ஆர்டில்குலேட் என்கிற நிறுவனம் இந்த வகை பர்ஸ் தயாரிப்பில் இறங்கியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in