

சீன ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான ஒன்ப்ளஸ், இந்தியாவில் அறிமுகமாகவுள்ள அதன் அடுத்த மொபைல் மாடல்களின் விலைகளை அறிவித்துள்ளது.
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ 8ஜிபி ரேம் / 128 ஜிபி விலை ரூ.54,999 . இந்த மாடல் வரிசையில் அதிகபட்சமாக 12ஜிபி ரேம் / 256 ஜிபி மொபைல் விலை ரூ. 59,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சற்று விலை குறைவான ஒன்ப்ளஸ் 8 அடிப்படை மாடல் 6ஜிபி ரேம் / 128ஜிபி ரூ. 41,999 என்றும், இதில் அதிகபட்சமாக 12ஜிபி / 256ஜிபி மொபைல் விலை ரூ. 49,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வரிசையில் 8ஜிபி / 128ஜிபி மாடலும் உள்ளது, இதன் விலை ரூ. 44,999
மே மாதம், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரே இந்த வரிசை மொபைல்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இந்தியாவில் அமேசான் தளத்தில் இந்த மொபைல் விற்பனை குறித்த நிகழ் நேரத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். ஒன்ப்ளஸ் ஹெட்ஃபோன், ‘புல்ல்டஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ்’ விலை ரூ.1,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
8 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் அகல QHD+ Fluid திரை, ஸ்னாப்ட்ரேகன் 865 ப்ராசஸர், 5ஜி வசதி உள்ளது. ஒன்ப்ளஸ் மாடலின் முதல் நான்கு கேமராக்கள் அமைப்பும் இதில் உள்ளது. இதில் பிரதான கேமரா 48 மெகாபிக்ஸல் தரத்தில் படங்களை எடுக்கும். மேலும் 48 மேகா பிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், 8 மெகா பிக்ஸல் டெலிஃபோடோ லென்ஸ் மற்றும் 5 மெகா பிக்ஸல் கலர் ஃபில்டர் கேமரா இதில் உள்ளன. செல்ஃபி கேமரா 16 மெகா பிக்ஸல் தரத்தில் எடுக்கும். இதன் பேட்டரி திறன் 4510mAh. வயர்லெஸ் முறையிலும் இதனைச் சார்ஜ் செய்யலாம்.
அடிப்படை 8 மாடலில், 6.55 இன்ச், fluid திரை. ஸ்னாப்ட்ரேகன் 865 ப்ராசஸர், 5ஜி வசதி, மூன்று கேமராக்கள் கொண்ட அமைப்பு உள்ளது. இதிலும் பிரதான கேமரா 48 மெகாபிக்ஸலிலும், செல்ஃபி கேமரா 16 மெகாபிக்ஸல் தரத்திலும் புகைப்படம் எடுக்கும். இதன் பேட்டரி திறன் 4300mAh.