ஃபேஸ்புக்கில் புதிதாக 'கட்டிப்புடி' வைத்தியம்' எமோஜி அறிமுகம்

ஃபேஸ்புக்கில் புதிதாக 'கட்டிப்புடி' வைத்தியம்' எமோஜி அறிமுகம்
Updated on
1 min read

தற்போது புதிதாக, அக்கறை, அரவணைப்பு காட்டும் விதமாக புதிய எமோஜியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ளது.

கோவிட்-19 தொற்றால் ஊரடங்கு நிலவி வரும் நிலையில், வீட்டுக்குள் இருக்கும் மக்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவது பல மடங்கு அதிகமாகியுள்ளது. ஃபேஸ்புக்கில் நமது நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்கள் பகிரும் பதிவுகளுக்கு லைக், லவ், ஹாஹா, வாவ், சோகம், கோபம் ஆகிய எமோஜிக்கள் மூலம் நாம் எதிர்வினை தெரிவிக்க முடியும். தற்போது புதிதாக, அக்கறை, அரவணைப்பு காட்டும்விதம் புதிய எமோஜியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ளது.

ஃபேஸ்புக் செயலி மற்றும் மெஸஞ்சர் என இரண்டிலும், அடுத்த வாரம் இந்த எமோஜியைப் பார்த்து, பயன்படுத்த முடியும். லைக் உள்ளிட்ட மற்ற எமோஜிக்கள் அருகில் இது வைக்கப்பட்டிருக்கும். இதில் ஃபேஸ்புக் செயலியில் இதயத்தைக் கட்டிப்பிடிப்பது போலவும், மெஸெஞ்சரில் பிங்க் நிற இதயம் துடிப்பது போலம் இந்த எமோஜி வைக்கப்பட்டிருக்கும்.

ஃபேஸ்புக் மற்றும் மெஸெஞ்சரில் கேர் எதிர்வினை (care reaction) வசதியை நாங்கள் அறிமுகம் செய்கிறோம். இந்த அசாதாரண சூழலில், மக்கள் ஒருவருக்கொருவர் அக்கறை, ஆதரவு காட்டுகிறார்கள் என்பதைப் பகிர இந்த எமோஜி கொடுக்கப்படுகிறது. கோவிட்-19 பிரச்சினையில் மக்கள் தங்கள் ஆதரவைக் காட்ட இது இன்னொரு வழியாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கோவிட்-19 பற்றிய தவறான தகவல்களுக்கு எதிர்வினையாற்றியிருந்த பயனர்களிடம், அந்தத் தகவல் பற்றிய உண்மை தெரிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in