Last Updated : 16 Apr, 2020 01:35 PM

 

Published : 16 Apr 2020 01:35 PM
Last Updated : 16 Apr 2020 01:35 PM

ஏப்ரலில் 80 சதவீதம் குறைந்த இந்தியப் போக்குவரத்து: ஆப்பிள் மேப்ஸ் தகவல்

தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஏப்ரல் மாதத்தில் 80 சதவீத வாகனப் போக்குவரத்து குறைந்துள்ளதாகவும், 75 சதவீதம் மக்களின் வழக்கமான நடமாட்டம் குறைந்துள்ளதாகவும் ஆப்பிள் மேப்ஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்டுப் பார்த்தால், புதுடெல்லியில் நடமாட்டமும், போக்குவரத்தும் ஏப்ரல் 13 அன்று 83 சதவீதம் வரை குறைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. அதே நாளில், மும்பையில் போக்குவரத்து 89 சதவீதமும், நடமாட்டம் 84 சதவீதமும் குறைந்துள்ளது. இந்தத் தரவுகளில் 63 நாடுகளைச் சேர்ந்த முக்கிய நகரங்களின் விவரங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. ஜனவரி 13 ஆம் தேதியிலிருந்து பதிவு செய்யப்பட்ட தரவுகள் கிடைக்கின்றன.

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் நடக்கும் பணிகளைக் காட்டவே இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் உள்ளூர் அரசாங்கம், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு உதவியாகவும், புதிய கொள்கைகளை வழிவகுக்க உதவிகரமாக இருக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் ஆப்பிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் மேப்ஸை எத்தனை முறை பயனர்கள் உபயோகித்தனர் என்பதை வைத்து இந்த எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கூகுள் தரப்பும் இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x