Published : 14 Apr 2020 07:12 PM
Last Updated : 14 Apr 2020 07:12 PM

’கரோனா ஸ்ட்ரைக்கர்’ - புதிய விழிப்புணர்வு விளையாட்டு அறிமுகம்

ரிலையன்ஸ் நிதியுடன் இயங்கி வரும் ஃபைண்ட் (Fynd) என்கிற இணைய வணிக தளம், கரோனா ஸ்ரைக்கர் என்ற புதிய விளையாட்டை அறிமுகம் செய்துள்ளது.

கோவிட்-19 தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பகுதியாக இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான மொபைல் விளையாட்டுகளைப் போல இதில் விளம்பரங்களும் வராது.

"இது அனைத்து வயதினரும் ஆடக்கூடிய, விளம்பரங்கள் இல்லாத எளிய விளையாட்டு. கோவிட்-19 முன்னெச்சரிக்கைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி மக்களிடம் சொல்வதே இந்த விளையாட்டின் நோக்கம்" என நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

கரோனா கிருமியைப் போன்ற ஒரு அரக்கனைப் பயனர்கள் எதிர்கொண்டு விளையாட வேண்டும். அந்தத் தொற்று உலகம் முழுவதும் பரவாமல் இருக்க அதைத் தோற்கடிக்க வேண்டும்.

"பலதரப்பட்ட மக்களைக் கவர விளையாட்டு அற்புதமான வழி. அது நிலையான தாக்கத்தை ஏற்படுத்தும். கரோனா ஸ்ட்ரைக்கர் விளையாட்டின் மூலமாக சமூகத்துக்குத் தேவையான செய்திகளை, மக்களை ஈர்க்கும் விதத்தில் பகிர்கிறோம். இது சமூக விலகல், வீட்டிலேயே ஆரோக்கியமாக, பாதுகாப்பாக இருத்தல் ஆகியவற்றுக்கு மக்களை ஊக்குவிக்கும்" என ஃபைண்ட் நிறுவனத்தின் ஃபரூக் ஆடம் கூறியுள்ளார்.

ஃபைண்ட் நிறுவனத்தில் தலைமை வடிவமைப்பாளராக இருக்கும் பிரதீப் திவாரி, மக்கள் இந்த நோய் பற்றிய முன்னெச்சரிக்கை விஷயங்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ளவே தாங்கள் விரும்புவதாகவும், அதனால்தான் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

ஆண்ட்ராய்ட் மொபைல்கள், டெக்ஸ்டாப் என்ற இரண்டு தளங்களிலும் இந்த விளையாட்டை விளையாடலாம். https://coronastriker.gofynd.com/and என்ற லின்க்கில் இந்த விளையாட்டு கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x