Published : 31 Mar 2020 16:44 pm

Updated : 31 Mar 2020 16:44 pm

 

Published : 31 Mar 2020 04:44 PM
Last Updated : 31 Mar 2020 04:44 PM

ஏப்ரல் 14-ல் ஒன் ப்ளஸ் 8 வரிசை மொபைல் அறிமுக நிகழ்ச்சி 

one-plus-mobile

ஒன் ப்ளஸ் 8 மொபைல் வரிசையின் அறிமுக நிகழ்ச்சி ஏப்ரல் 14-ம் தேதி நடக்கும் என அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்ட் மொபைல் பயனர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவை ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் மொபைல்கள். ஒவ்வொரு புதிய மாடல் விற்பனைக்கு வரும்போது சர்வதேச அளவில் எண்ணற்ற மொபைல்கள், விற்ப்னை ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிடம். முன் பதிவிலேயே அதிக ஒன் ப்ள்ஸ் மொபைல்கள் வாங்கப்படுகின்றன.


தற்போது ஒன் ப்ளஸ் 8, ஒன் ப்ளஸ் 8 ப்ரோ மற்றும் விலை குறைந்த ஒன் ப்ளஸ் 8 லைட் ஆகிய மொபைல்களை ஒன் ப்ளஸ் 8 வரிசை மொபைல்களாக அந்நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி நெட்வொர்க் அம்சத்துடன் வரும் இதில் குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 865 ப்ராசஸர் அமைந்துள்ளது. கரோனா தொற்று எதிரொலியில் பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த மொபைலின் அறிமுகம் நிகழ்ச்சி நேரலையாக ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!

கரோனாகொரோனாமொபைல் போன் நிகழ்ச்சிஒன் ப்ளஸ் 8ஒன் ப்ளஸ் மொபைல் போன்ஒன் ப்ளஸ் மொபைல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x