

பெண்கள் கர்ப்பமாக இருப்பதை தாங்களே தெரிந்து கொள்ள ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளது யோனோ நிறுவனம். தூங்கும்போது இதன் ஹியர்போனை காதுக்குள் பொருத்திக்கொள்ள வேண்டும்.
உடலின் வெப்ப நிலையின் அடிப்படையில் இந்த இயர்போன் தகவல்களை சேகரித்துக் கொள்ளும். தூங்கி எழுந்ததும் இந்த ஹியர்போனை இதற்கென உள்ள ஒரு சிறிய கருவியில் பொருத்தி விட வேண்டும்.
இந்த கருவியிலிருந்து ஸ்மார்ட்போனுக்கு புளூடூத் வழி அனைத்து தகவல்களும் பரிமாறப்பட்டு விடுகிறது. கர்ப்பமாக இருக்கிறோமா இல்லையா என்பதையும் உறுதிப்படுத்துகிறது.