

வீட்டில் பில்டர் காபி சுவைக்கு பழகியவர்கள், வெளியில் இன்ஸ்டண்ட் காபி குடிப்பதை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு என்றே பில்டர் காபி பொடி பாக்கெட்டை வெளியிடுகிறது குஜூ காபி நிறுவனம்.
ஜப்பானின் பிரபலமான ஓரிகாமி பேப்பர் கலை வடிவத்தை பயன்படுத்தி எளிதாகப் பிரிக்கக்கூடிய நான்ஓவன் பாக்கெட்டில் காபி பொடி அடைத்து வைக்கப்படுகிறது.
இந்த பாக்கெட்டை பிரித்து காபி கோப்பையில் நுழைத்து வெந்நீர் ஊற்றினால் காபி ரெடியாகிவிடும். கிட்டத்தட்ட டீ பாக்கெட் போலத்தான் என்றாலும், இதன் பாக்கெட் வடிவம் காபியை போலவே கவருகிறது.