

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் வீட்டுப் பாதுகாப்புக்கான ஹோம் ஆட்டோமேஷன் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
இந்த 2 மெகா பிக்ஸல் கேமராவில் வைஃபை, பான், சுழற்வசதி, டிஜிட்டல் ஜூம் உள்ளிட அம்சங்கள் உள்ளன. மேலும் இதில் செயற்கை நுண்ணறிவு கொண்ட செயலி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. மோஷன் டிடக்சன் எனும் சிறப்பு அம்சமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கேமரா ஏதேனும் ஒரு அசைவை உணருமானால், உடனடியாக அலாரம் எழுப்பி, பயனரின் மொபைலுக்கு ஒரு செய்தியை அனுப்பும். இதனால பயனர் உடனடியாக உங்களது வீட்டைக் கண்காணிக்க/ பரிசோதிக்க இயலும்.
கேமராவில், உட்பொருத்தப்பட்ட ஸ்பீக்கர் மற்றும் மைக் உதவியுடன், கண்காணிப்பு மட்டுமின்றி வீட்டில் உள்ள நபர்களுடன் தொடர்பு கொள்ளும் வசதியும் உள்ளது. ப்ளே ஸ்டோரில் அல்லது ஆப் ஸ்டோரில் கிடைக்கும் MIPC செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்தச் செயலியை கேமராவுடன் எளிதாகப் பொருத்திக் கொள்ள முடியும். மேலும் கேமரா கோணங்களை மாற்றுதல், ஜூம் செய்தல், அலாரம் அமைப்பை இயக்குதல், நகர்வைப் பதிவு செய்தல் உள்ளிட்ட வசதிகளையும் இந்தச் செயலி மூலமாகவே இயக்க முடியும்.
மைக்ரோ SD கார்டு சப்போர்ட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதிக மெமரியை எடுத்துக் கொள்ளாத H.264 ஃபார்மெட்டில் வீடியோக்கள் பதிவு செய்யப்படுகின்றன. இரவு நேரங்களில் கூடுதல் கண்காணிப்புக்காக 10 மீட்டர் அளவு வரை இன்ஃப்ரா ரெட் வரம்பை அமைத்து அசைவுகளை வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கேமராவை சுவரில் பொருத்தலாம் அல்லது மேசை மீது வைத்தும் உபயோகப்படுத்தலாம்.