

ஒரே அறையில் தூங்குபவர்களில் யாரேனும் குறட்டை விடுபவர்களாக இருக்கும்பட்சத்தில் ஒவ்வொரு இரவும் நரகம்தான். பாவம் அவர்தான் என்ன செய்வார்.
வேண்டுமென்றா விடுகிறார்? பொதுவாக விட்டத்தைப் பார்த்து படுக்கும்போது குறட்டை அதிகமாகவும், ஒருபுறமாக திரும்பி படுக்கையில் அந்த அளவுக்கு குறட்டை வராது என்றும் கூறப்படுகிறது.
அதற்காக நாம் ஒவ்வொரு முறையும் அவரைத் தட்டி, ஒழுங்காக படு என்று சொல்ல முடியாது. இத்தகைய பிர்ச்சினையை தீர்க்க வந்துள்ளது குறட்டை தவிர்ப்பு சாதனம் ‘ஸ்னூர்’.
ஒன்றுமில்லை, இதை குறட்டை நபரின் நெற்றியில் ஒட்டிவிட்டால் போதும். அவர் இரவு உறக்கத்தில் மல்லாக்க திரும்பினால் இந்த கருவி வைப்ரேட் ஆகும். அவர் மீண்டும் ஒரு பக்கம் சாய்ந்து தூங்கும் வரை வைப்ரேட் ஆகிக் கொண்டே இருக்கும்.