Published : 02 Mar 2020 09:57 AM
Last Updated : 02 Mar 2020 09:57 AM

ஸ்மார்ட் குக்கர்

சமையல் கலன்களில் குக்கரின் இடம் வேறு எவற்றாலும் பதிலீடு செய்ய முடியாதவை. அந்தவகையில் இந்தக் குக்கர் கூடுதல் சிறப்பு மிக்கது. மைக்ரோவேவ் ஓவனில் இருப்பதுபோல் இந்தக் குக்கரில் பொத்தான்கள் இருக்கும்.

நாம் குக்குரில் இறைச்சி, காய்கறிகள் என பலவிதமாக கலவைகளையும் சேர்த்தே வேக வைக்கிறோம். இந்தக் குக்கர் என்ன செய்யுமென்றால், அந்தந்தப் பொருட்களுக்கு ஏற்ப வெப்ப நிலையைத் தக்கவைத்துக் கொள்ளும். இந்தக் குக்கரின் கீழ் மற்றும் மேல்புறங்களில் சென்சார்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.

அவை உள்ளே வேகும் பொருட்களின் தன்மை அறிந்து அதற்கேற்ப வெப்பநிலையை மாற்றி அமைத்துக்கொள்ளும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x