

அன்றாடம் வெளியே செல்பவர்களுக்கு வாட்டர் பாட்டில் இன்றியமையாதது. பலரும் பிளாஸ்டிக் கேன்களைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர். தற்போது பல்வேறு மாடல்களில் பாட்டில்கள் வரத் தொடங்கியுள்ளன. எவர்சில்வர் கேன்கள் பரவலான பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
பாட்டில் எப்படி இருந்தாலும் உள் இருக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டுமே? அவ்வாறு தண்ணீரை சுத்திகரிக்கும் பாட்டில் இருந்தால் எப்படி இருக்கும்? லார்க் பாட்டில் யுவி-சி எல்இடி என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
இதில் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டும் உள்ளது. அவ்வப்போது சார்ஜ் செய்துகொள்ள வேண்டும். பிறகு அதில் நிரப்பப்படும் நீரை அதுவே சுத்திகரித்துக்கொள்ளும்.
பொதுவாக தண்ணீர் பாட்டில்களைச் சுத்தம் செய்வது சற்று சிரமம். அதிகபட்சமாக சுடுதண்ணீரை நிரப்பி, நான்கைந்து முறை குலுக்கி கழுவ முடியும். ஆனால், லார்க்கில் அந்த சிரமங்கள் ஏதும் இல்லை. அப்பணியையும் லாக் தானாகவே செய்துகொள்ளும்.