

இன்ஸ்டாகிராம் பயனர்கள் பக்கத்தைப் போல (ப்ரொஃபைல் பேஜ்) டிக் டாக்கும் தனது பயனர்களின் பக்கத்தை மாற்றியமைத்து வருகிறது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர் டெய்லர் லாரன்ஸ் முதலில் இந்த மாற்றத்தை அடையாளம் கண்டு கொண்டுள்ளார். இந்த மாற்றியமைக்கப்பட்ட பக்கத்தில் அவதார்ஸ், பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஆகியவை நடுவிலிருந்து இடது பக்கம் அமைந்துள்ளது. பயனர்களின் தனிப்பட்ட விவரங்களுக்கான இடத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களை உறுதி செய்துள்ள டிக் டாக் நிறுவனம், இந்தப் புதிய ப்ரொஃபைல் வடிவங்களும் செயல்முறையும், பயனர்கள் இன்னும் கூடுதலான ஈடுபாட்டுடன் செயலியைப் பயன்படுத்த செயல்படுத்தப்படவுள்ளதாகக் கூறியுள்ளது.
2019-ம் ஆண்டு அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பட்டியலில் ஃபேஸ்புக்கை முந்தி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது டிக் டாக். இந்தியாவில்தான் டிக் டாக் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதன் பயனர்களில் 44 சதவிதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.