Published : 04 Feb 2020 02:48 PM
Last Updated : 04 Feb 2020 02:48 PM

எப்போது வெளியாகிறது எம்ஐ 10? - ஆவலுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 

ஸ்மார்ட்போன் வாடிகையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த எம்ஐ 10 மற்றும் எம்ஐ 10 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் பிப்.13-ம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்ஐ சீரிஸின் அடுத்த ஸ்மார்ட்போன்களான எம்ஐ 10 மற்றும் எம்ஐ 10 ப்ரோ இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியாகும் என ஜியோமி தலைமை அதிகாரி லீ யூன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன்படி எம்ஐ 10 மற்றும் எம்ஐ 10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வரும் பிப். 13 அன்று வெளியாக வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் ஜியோமி நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

வரும் 7-ம் தேதியே எம்ஐ ஸ்மார்ட்போன்களை ஜியோமி நிறுவனம் வெளியிட இருந்ததாகவும், ஆனால் தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பீதியால் முன்கூட்டியே வெளியீட்டு நிகழ்ச்சியை அந்நிறுவனம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் எம்ஐ 10 மற்றும் எம்ஐ 10 ப்ரோ விற்பனை வரும் பிப்.14 அன்று தொடங்கும்.

எம்ஐ 10 சிறப்பம்சங்கள்:

குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 865 எஸ்ஓசி ப்ராசஸர்

8 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு அளவு

6.53 இன்ச் புல் எச்டி டிஸ்பிளே

ஓஎஸ்: ஆண்ட்ராய்டு 10

கேமரா: பின்புற கேமராக்கள் - முதன்மை கேமரா 64 மெகாபிக்சல், 20 மெகாபிக்சல் வைடு ஆங்கிள், 12 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என நான்கு கேமராக்கள் உள்ளன.

பேட்டரி: 5250-MAh

* 18 வாட் அதிவேக சார்ஜர்

* டைப்- மைக்ரோ யுஎஸ்பி

எம்ஐ 10 ப்ரோ சிறப்பம்சங்கள்:

குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 865 எஸ்ஓசி ப்ராசஸர்

12 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு அளவு

6.53 இன்ச் புல் எச்டி டிஸ்பிளே

ஓஎஸ்: ஆண்ட்ராய்டு 10

கேமரா: பின்புற கேமராக்கள் - முதன்மை கேமரா 108 மெகாபிக்சல், 48 மெகாபிக்சல் வைடு ஆங்கிள், 12 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் என நான்கு கேமராக்கள் உள்ளன.

பேட்டரி: 5250-MAh

* 18 வாட் அதிவேக சார்ஜர்

* டைப்- மைக்ரோ யுஎஸ்பி

நீண்ட நாட்களாக காத்திருந்த எம்ஐ 10 மற்றும் எம்ஐ 10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பிப்.13-ம் தேதி வெளியாகிறது என்ற தகவலால் எம்ஐ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x