

சாம்சங் நிறுவனம் தனது அடுத்த கேலக்ஸி மாடல் மொபைலை இன்னும் அறிவிக்காத நிலையில், பெயரிடப்படாத அந்த ஸ்மார்ட்போனுக்கான விற்பனை முன்பதிவைத் தொடங்கியது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பயனர்கள் பதிவு செய்து கொண்டால், இந்த விற்பனை முன் பதிவு எப்போது நடைபெறுகிறது என்பது பயனர்களுக்குத் தெரிவிக்கப்படும். இப்போதைக்கு அமெரிக்காவில் இருக்கும் மொபைல் சேவை நிறுவனங்களின் பெயர்கள் மட்டுமே தளத்தில் கொடுக்கப்படுள்ளதால், அமெரிக்காவில் மட்டுமே இந்த மொபைல்கள் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகியுள்ளது.
வரும் பிப்ரவரி 11-ம் தேதி புதிய கருவிகளின் அறிமுக நிகழ்ச்சியை சாம்சங் நிறுவனம் நடத்துகிறது. இதில் கேலக்ஸி எஸ் 20, கேலக்ஸி ஜீ ஃபிலிப், புதிய கேலக்ஸி இயர்பட்ஸ் ஆகியவை அறிமுகமாகவுள்ளன.