நீளமான விமான பயணம்

நீளமான விமான பயணம்
Updated on
1 min read

உலகின் நீளமான விமான பயணத்தை வழங்க உள்ளது எமிரேட்ஸ் விமான நிறுவனம். துபாய் நகரத்திலிருந்து பனாமா நகரம் வரைக்குமான 17.35 மணி நேர பயணத்தில் இடை நிறுத்தம் இல்லாமல் பறக்க உள்ளது எமிரேட்ஸின் போயிங் 777-220எல்ஆர் ரக விமானம்.

தற்போது 17.17 மணிநேர பயணம் வழங்கி வரும் குவாண்டாஸ் ஏர்வேஸின் சிட்னி முதல் டல்லாஸ் வரையிலான பயணமே நீளமான பயணமாக இருக்கிறது. எமிரேட்ஸின் விமானத்தில் ஒரு சமயத்தில் 256 பயணிகள் பயணிக்கலாம். 15 டன் பொருட்களையும் சுமந்து செல்லும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த சேவை தொடங்க உள்ளது.

பெட் ஜெட்

வீட்டுக்கு வெளியே எந்த விதமான பருவநிலை இருந்தாலும் படுக்கையில் உடலுக்கு தேவையான சீதோஷ்ணத்தை தக்க வைக்கிறது இந்த பெட்ஜெட் கருவி. வெளியில் வெப்பநிலை அதிகமாக இருந்தால் நமது உறக்கத்துக்கு ஏற்ப படுக்கையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் குளிர்காலத்தில் படுக்கையை சற்று வெப்பமாக வைத்துக் கொள்ளவும் இந்த கருவி வேலை செய்கிறது.

போன் மூலம் இந்த கருவியை கட்டுப்படுத்தலாம். வீட்டு உபயோகம் தவிர, மருத்துவமனைகளில் அதிக அளவில் பயன்படுத்தக்கூடும் என எதிர்பார்ப்பு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in