Published : 07 Aug 2015 03:17 PM
Last Updated : 07 Aug 2015 03:17 PM

கேட்ஜெட் கார்னர்

புதிய 4ஜி ஸ்மார்ட் போன்

இண்டெக்ஸ் நிறுவனம் புதிதாக ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இண்டெக்ஸின் அக்குவா வரிசையில் அக்குவா ட்ரெண்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போனின் விலை ரூ. 9,444. இரட்டை சிம் வசதி கொண்ட இந்த போனில் 4 ஜி வசதி உள்ளது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இந்த போனுக்கு ஆந்திராவுக்கும் தெலங்கானாவுக்கும் பிராண்ட் அம்பாஸிடராக உள்ளார்.

இதன் அம்சங்கள்:

திரை: 5 அங்குலம் எச்.டி.

ராம்: 2 ஜி.பி.

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1

ரியர் கேமரா: 13 எம்பி

ஃப்ரண்ட் கேமரா: 5 எம்பி

கனெக்டிவிடி: 4 ஜி, வை ஃபை, ப்ளுடூத்

ரூ. 6,222-க்கு புது ஸ்மார்ட் ஃபோன்

செல்கான் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஃபோன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்நிறுவனத்தின் மில்லேனியா எக்ஸ்ப்ளோரைத் தொடர்ந்து மில்லேனியா 2 ஜி.பி. எக்ஸ்பிரஸ் ஸ்மார்ட் போன் சந்தையில் புழக்கத்துக்கு வந்துள்ளது. இது இரட்டை சிம் வசதி கொண்ட ஃபோன். இதன் சேமிப்புத் திறன் 16 ஜி.பி.., ஆனால் மெமரி கார்டு மூலம் 32 ஜி.பி. வரை விரிவுபடுத்திக்கொள்ள முடியும். இதன் விலை ரூ. 6,222.

இதன் அம்சங்கள்:

திரை: 4.5 அங்குலம்

ராம்: 2 ஜி.பி.

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4

ரியர் கேமரா: 5 எம்பி

ஃப்ரண்ட் கேமரா: 1.3 எம்பி

கனெக்டிவிடி: வை ஃபை, ப்ளுடூத்

எடை: 134 கிராம்

புதிய செல்பி ஃபோன்

லாவா நிறுவனம் அதன் முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட் போனை (பிக்ஸெல் வி1) அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து இப்போது ஐரிஸ் எக்ஸ்1 வரிசையில் ஆறாவது ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. லாவா ஐரிஸ் எக்ஸ்1 செல்பி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஃபோன் பெயருக்கேற்றபடி செல்பிக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்பட்டுள்ளது. இரட்டை சிம் வசதி கொண்ட இந்த ஃபோனின் சேமிப்புத் திறன் 8 ஜி.பி., ஆனால் மெமரி கார்டு மூலம் 32 ஜி.பி. வரை விரிவுபடுத்திக்கொள்ள முடியும். ஐஸி ஒயிட், ராயல் ப்ளாக், பர்ப்பிள் ஆகிய நிறங்கள் இது கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6,777.

இதன் அம்சங்கள்:

திரை: 4.5 அங்குலம்

ராம்: 1 ஜி.பி.

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1

ரியர் கேமரா: 8 எம்பி

ஃப்ரண்ட் கேமரா: 5 எம்பி

கனெக்டிவிடி: வை ஃபை, ப்ளுடூத்

எடை: 140 கிராம்

விக்கெட்லீக் நிறுவனத்தின் புது போன் அறிமுகம்

வாம்மி நியோ 3 என்னும் பெயரில் விக்கெட்லீக் நிறுவனம் புது போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகப் படுத்தியிருக்கிறது. இந்த ஃபோன் இந்த நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கும். இரட்டை மைக்ரோ சிம் வசதி கொண்ட போன் இது. இது கறுப்பு நிறத்தில் கிடைக்கிறது. இதன் சேமிப்புத் திறன் 16 ஜி.பி.., ஆனால் மெமரி கார்டு மூலம் 64 ஜி.பி. வரை விரிவுபடுத்திக்கொள்ள முடியும். இதன் விலை ரூ. 15,990.

இதன் அம்சங்கள்:

திரை: 5.5 அங்குலம்

ராம்: 3 ஜி.பி.

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1

ரியர் கேமரா: 14 எம்பி

ஃப்ரண்ட் கேமரா: 4.9 எம்பி

கனெக்டிவிடி: 4 ஜி, வை ஃபை, ப்ளுடூத்

எடை: 177 கிராம்

டெல் நிறுவனத்தின் பட்ஜெட் டேப்லெட்

டெல் நிறுவனம் தனது வென்யு 7 வரிசையில் புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. வென்யு 7 3741 எனும் பெயரில் அந்த டேப்லெட் வெளிவந்திருக்கிறது. பட்ஜெட் விலைக்குள் அடங்கும் இது வீடியோ காலிங் வசதிக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. தகவல்களை எளிதாகவும் உயர்தரத்திலும் பெற விரும்புவர்களுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளதாக டெல் நிறுவனம் கூறுகிறது. ஒரு சிம் கொண்ட இதன் விலை ரூ. 7,999.

இதன் அம்சங்கள்:

திரை: 6.95 அங்குலம் எச்.டி.

ராம்: 1 ஜி.பி.

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4

ரியர் கேமரா: 2 எம்பி

ஃப்ரண்ட் கேமரா: 0.3 எம்பி

கனெக்டிவிடி: 3 ஜி, வை ஃபை, ப்ளுடூத்

எடை: 315 கிராம்

- தொகுப்பு: ரிஷி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x