டிராப் பாக்ஸில் புதிய வசதி

டிராப் பாக்ஸில் புதிய வசதி
Updated on
1 min read

கோப்பு பகிர்வு சேவையான டிராப் பாக்ஸில் இருந்த சின்னக் குறை இப்போது சரி செய்யப்பட்டிருக்கிறது. இனி, டிராப் பாக்ஸில் கோப்புகளைச் சேமிக்கும்போது அவற்றுடன் இணைய முகவரிகளையும் சேமித்து வைக்கலாம்.

இதற்கான புதிய வசதி டிராப் பாக்ஸில் அறிமுகமாகியிருக்கிறது. இணைய முகவரிகளை டிராக் செய்து டிராப் பாக்ஸ் பக்கத்தில் சேமித்துவிடலாம். டெஸ்க் டாப் மற்றும் ஸ்மார்ட் போன் என எல்லாச் சாதனங்களிலும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். சேமித்த இணைய முகவரிகளை எந்த இடத்தில் இருந்தும் எந்தச் சாதனத்தில் இருந்தும் பயன்படுத்தலாம்.

சேமிக்கும் இணைய முகவரிகளை எப்போது வேண்டுமானால் கிளிக் செய்து பயன்படுத்தலாம். கிட்டத்தட்ட புக்மார்க் வசதி போலவே இதைப் பயன்படுத்தலாம். ஆனால், சேமிக்கும் முகவரிகளை டேக் செய்யவோ, குறிப்பிட்ட தலைப்பில் வகைப்படுத்தி அடையாளப்படுத்தவோ வசதி இல்லாதது தான் ஒரே குறை.

இது தொடர்பான டிராப் பாக்ஸ் அறிவிப்பு: >http://tech.firstpost.com/news-analysis/you-can-now-drag-and-drop-urls-into-your-dropbox-278707.html

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in