

எதிர்காலத்தில் அதிவிரைவான பயணத்துக்கு ஹைட்ரோலூப் தொழில்நுட்ப வழியில் முயற்சித்து வருகிறது உலகம். உருளை வடிவிலான குழாய்க்குள் காற்று அழுத்தம் மூலம் பயணம் செய்வதுதான் இந்த தொழில்நுட்பம்.
தற்போது இதற்கு செயல் வடிவம் கொடுக்க உள்ளார் பேட்டரி கார் தயாரிப்பில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸின் எலன் மாஸ்க். அடுத்த ஆண்டில் இதன் சோதனை ஓட்டத்துக்கான பாதையை அமைக்க உள்ளார். 8 கிலோ மீட்டருக்கு இந்த பாதை அமைய உள்ளது.
இந்த தொழில்நுட்பம் வெற்றி பெற்றால் 600 கிலோமீட்டர் தூரத்தை 30 நொடிகளுக்குள் கடந்து செல்ல முடியுமாம்.