

ஜப்பான் நாட்டில் ரோபோ புரட்சியே நடந்து வருகிறது என்று சொல்லலாம். விதவிதமான வகைகளில் மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ற ரோபோக்களை தயாரித்து வருகின்றன ரோபோ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்.
ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க் ரோபோட்டிக்ஸ் கார்ப் நிறுவனம் சமீபத்தில் பெப்பர் என்கிற மனித வடிவிலான 1000 ரோபோக்களை விற்பனைக்கு கொண்டு வந்தது. அறிவிக்கப்பட்ட ஒரு நிமிடத்தில் அனைத்து ரோபோக்களும் விற்பனையாகிவிட்டது.
ஆட்டோமேட்டிக் சென்சார் மூலம் இயங்கும் இந்த ரோபோ சென்டிமென்டலாக அட்டாச் ஆகிவிட்டது ஜப்பானில்.