Published : 23 Oct 2019 06:12 PM
Last Updated : 23 Oct 2019 06:12 PM

பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். இணைக்கப்படுவது நல்லதா? 

இந்தியாவின் இரண்டு தொலைத் தொடர்பு பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் என்.டி.என்.எல். ஆகியவற்றை இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இம்மாதிரியான முயற்சி இது 3ம் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

2002-ல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன், மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனங்களை இணைக்கும் பரிந்துரையை முதலில் மேற்கொண்டார்.

இதற்கான காரணம் எளிதானது, டெல்லி, மும்பையில் மட்டும் சேவைகளை வழங்கி வரும் எம்.டி.என்.எல். பரவலான சந்தைக்கு எடுத்துச் செல்லப்பட முடியவில்லை எனில் நீடித்து செயல்பட முடியாது. இரண்டு தொலைத் தொடர்பு பொதுத்துறை நிறுவனங்கள் தேவையில்லை என்று முடிவெடுத்த பிரமோத் மகாஜன் பி.எஸ்.என்.எல், மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை இணைப்பதை அவசியமாகக் கருதினார்.

ஆனால் கட்டமைப்புப் பிரச்சினைகளினால் இந்த இணைப்பு சாத்தியமாகாமல் போனது. மேலும் எம்.டி.என்.எல் பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தது, பி.எஸ்.என்.எல் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கவில்லை, இதனையடுத்து எம்.டி.என்.எல் நிறுவனத்தை லிஸ்ட்டிலிருந்து எடுத்து விட்டு பி.எஸ்.என்.எல்.ஐ லிஸ்ட் செய்யலாமா என்ற விவகாரம் இருந்தது. மேலும் ஊழியர்கள் சங்கமும் இரு நிறுவனங்களையும் இணைப்பதை எதிர்த்து வந்தன.

நாட்டில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருந்த காலக்கட்டத்தில்தான் எம்.டி.என்.எல் தொடங்கப்பட்டது. தொலைத் தொடர்பு சேவையின் தரம் குறித்து எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களை அடுத்து 1986ன் ஆண்டின் மத்திய அரசு மெட்ரோ நகரங்களில் கார்ப்பரேட் தொலைத் தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கி தரமான சேவைகளை வழங்க திட்டமிட்டது. குறைந்தது தொலைத் தொடர்பு சேவைகளுக்காக கட்டணம் செலுத்த முடியக்கூடிய வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு இது பரிசீலிக்கப்பட்டது.

இது நல்ல பலன் அளித்தது, எம்.டி.என்.எல் நிறுவனம் மதிப்பு மிக்க ஒரு பொதுத்துறை நிறுவனமாக வளர்ச்சியுற்றது. 1997-ல் நவரத்னா அந்தஸ்து பெற்றது. இந்தியாவின் பணம் கொழிக்கும் இரண்டு நகரங்களில் சேவைகளைத் தொடங்கியது நிறுவன வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியது. ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ, ஐபிடிவி போன்ற சேவைகள் அறிமுகமாகின.

2003-04-ல் எம்.டி.என்.எல். இன் நிகர லாபம் 45% அதிகரித்து ரூ.1,277 கோடியாக அதிகரித்தது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.877 கோடியாக இருந்தது.

அதன் பிறகுதான் சரிவு கண்டது. டெல்லி, மும்பை சந்தைகள் முழுதும் பயன்படுத்தப்பட்ட நிலையில் சரிவு ஏற்படத் தொடங்கியது. பிற தொலைத்தொடர்பு சேவைகள் தேசிய அளவில் தடம்பதிக்கத் தொடங்கி விட்டனர். இதனையடுத்து ரோமிங் சேவைகளுக்காக எம்.டி.என்.எல். ஏகப்பட்ட செலவில் ரோமிங் உடன்படிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் டெல்லி மும்பையின் எம்.டி.என்.எல். வாடிக்கையாளர்கள் அனைத்திந்திய நெட்வொர்க்குகலைப் பெற உள்தொடர்பு ஏற்பாடுகளுக்காகவும் எம்.டி.என்.எல்-இன் செலவுகள் அதிகரித்தன. மேலும் அதன் வருவாயில் பணியாளர்கள் ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் 90% ஆகிவிட்டன.

அரசியல்வாதிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் மலிவு விலையில் மொபைல்/இண்டெர்நெட் இணைப்புகளும் எம்.டி.என்.எல்-ன் நிதியாதாரங்களைக் காலி செய்தது. மார்ச் 2019-ல் ஒட்டுமொத்த நஷ்டம் ரூ.3,388 கோடியாக அதிகரித்தது.

இந்நிலையில் இரு பொதுத்துறை நிறுவனங்களின் மோசமான நிதிநெருக்கடி நிலைகளில் இந்த இணைப்பு நன்மை பயக்கும் என்று இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த முறை இணைப்பு நடைபெறவில்லை எனில் இரு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் சிக்கல்தான் என்று இந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கருதுகின்றனர்.

- தி இந்து பிசினஸ்லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x