அரசு நாட்காட்டி

அரசு நாட்காட்டி
Updated on
1 min read

விடுமுறை நாட்களில் அரசு அலுவலகங்களுக்குச் சென்று ஏமாந்து திரும்பிய அனுபவம் உள்ளவரா நீங்கள்? இனி இப்படி ஒரு சங்கடத்தை எதிர்கொள்வதைத் தவிர்க்க உதவுகிறது அரசு நாட்காட்டி செயலியான Govt. of India Calendar 2015.

ஆண்ட்ராய்டு போனில் செயல்படக்கூடிய இந்தச் செயலி, 2015 -ம் ஆண்டின் அரசு அலுவலகங்களை அடையாளம் காட்டுவதோடு அரசு நிகழ்ச்சிகளையும் சுட்டிக்காட்டுகிறது. இடது பக்கம் அல்லது வலது பக்கம் தள்ளினால் மாதங்களை முன்னும் பின்னும் மாற்றிக்கொள்ளலாம்.

இவை தவிர பிரதமரின் குறும்பதிவுகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகள் ஆகியவற்றையும் காணலாம். அரசு இணையதளங்களின் பட்டியலும் இருக்கிறது.

தரவிறக்கம் செய்ய: https://goo.gl/W0vUEF

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in