Published : 25 Sep 2019 01:26 PM
Last Updated : 25 Sep 2019 01:26 PM

இனி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களையே ஃபேஸ்புக் ஸ்டோரியாக வைக்கலாம்!

சான் ஃப்ரான்சிஸ்கோ

வாட்ஸ் அப்பில் நாம் வைக்கும் ஸ்டேட்டஸ்களையே இனி ஃபேஸ்புக் ஸ்டோரியாகவும் வைத்துக்கொள்ளும் வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வாட்ஸ் அப் பயனர்கள், ஒரே நேரத்தில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸையும் ஃபேஸ்புக்கில் ஸ்டோரியையும் பகிர்ந்துகொள்ள முடியும். இந்த வசதி ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் என இரண்டு இயங்கு தளங்களிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் My Status பகுதிக்குக் கீழேயே இருக்கும் "Share to Facebook Story" என்ற தெரிவைத் தேர்வு செய்வதன் மூலம், நீங்கள் வாட்ஸ் அப்பில் வைத்திருக்கும் ஸ்டேட்டஸ், ஃபேஸ்புக் பக்கத்துக்குச் செல்கிறது.

அதில், Share Now என்னும் தெரிவைத் தொடுவதன் மூலம், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஃபேஸ்புக் ஸ்டோரியாக, ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்படுகிறது. எனினும் இந்த அம்சத்துக்கு வழக்கமாக வாட்ஸ் அப்பில் இருக்கும் என்க்ரிப்ஷன் வசதி செல்லுபடியாகாது என்று கூறப்படுகிறது.

சோதனை முயற்சியாக கடந்த மே மாதமே அறிமுகமான ஸ்டேட்டஸ் டூ ஸ்டோரி வசதி, தற்போது அனைத்துப் பயனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x