

போக்குவரத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை களை உடனுக்குடன் தீர்ப்பதற்காக டெல்லி போக்குவரத்து போலீஸார் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் டெல்லியில் ஏதாவது ட்ராஃபிக் சம்பந்தப்பட்ட பிரச்சினையென்றால் அதை உடனடியாக காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லமுடியும். டெல்லியில் ஆட்டோ, டாக்ஸி, ஆகியவற்றிற்கான கட்டண விவரங்களும் அந்த அப்ளிகேஷனிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் கட்ட ணம் வசூலிக்கும் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் பற்றி புகாரளிக்கும் வசதியும் அந்த அப்ளிகேஷனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.