டெம்பிள் ஜங்கிள் கேம்

டெம்பிள் ஜங்கிள் கேம்

Published on

குழந்தைகளைப் போல் ஜாலியாக விளையாட வேண்டுமானால் இந்த கேமை நீங்கள் தைரியமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஏனென்றால் இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டதைப் போல் உள்ளது. டெம்பிள் ரன் அளவுக்கு சுவாரஸ்யமாக இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இலவசமான இந்த மொபைல் கேமில் மொத்தம் 80 லெவல்கள் உள்ளன. வாளேந்திய வீரனிடமிருந்து நீங்கள் தப்பிக்கவும் வேண்டும். அதே நேரத்தில் அதிக அளவிலான தங்க நாணயங்களைச் சேகரிக்கவும் வேண்டும்.

இந்த கேமின் கிராபிக்ஸ் தரம் வசீகரமாக உள்ளதெனப் பயன்படுத்தியவர்கள் கூறுகிறார்கள்.

டவுன்லோட் செய்ய: https://goo.gl/Uhzeb1

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in