Last Updated : 11 Sep, 2019 07:40 PM

 

Published : 11 Sep 2019 07:40 PM
Last Updated : 11 Sep 2019 07:40 PM

கூடுதல் வசதிகளுடன் புதிய வரவான ஆப்பில் வாட்ச் 5 சீரிஸ் : சூடான விற்பனையில்

ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 10-ம் தேதி கலிபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 புதிய ஐபோன் 11 சீரிஸ் போன்கள், ஆப்பிள் ஆர்க்காடு கேமிங், ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மற்றும் புதிய 7-ம் ஜெனெரேஷன் ஐபாட் ஆகிவற்றை அறிமுகம் செய்தது.

இதில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் தனது முந்தைய 5 மாடல்களை விட நன்றாக மேம்படுத்தப்பட்டு வெளிவந்துள்ளது. இதில் முக்கியமானது (Always On) டிஸ்ப்ளே ஆஃப் ஆகாமல் ஆன் ஆகிருக்கும் திரையில் நேரமும் பிற தகவல்களையும் காட்டிக் கொண்டே இருக்கும். இதன் LTPO (Low-Temperature Polycrystalline Oxid) டிஸ்ப்ளே பவரை சேமிக்கிறது. இதில் கூடுதல் வசதியாக 18 மணி நேரம் வரை தாங்கக் கூடிய சக்திப்பெற்ற பேட்டரி வசதி உள்ளது.

இத்துடன் பில்ட்-இன் காம்பேஸ் மற்றும் புதிய மேப்ஸ் இடம் பெற்றுள்ளது. உபயோகப் படுத்துவோரின் latitude,longitude,directions போன்ற விவரங்களை காண்பித்துவிடும். ஆபத்தான காலங்களில் எச்சரிக்கை கொடுக்கும் சர்வதேச அவசர எண்கள் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 கோல்ட், ஸ்பேஸ் பிளாக், பிளாக், பிரஸ்டு அலுமினியம் (Brushed aluminium), பிரஸ்டு ஸ்பேஸ் பிளாக் (brushed space black) ஆகிய வண்ணங்களில் வெளிவந்துள்ளது. மேலும் இது லெதர் மாடலிலும் வந்துள்ளது.

இந்தியாவில் இதன் விற்பனை செப்டம்பர் 27-ம் தேதி துவங்குகிறது. இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 - ன் விலை ரூ. 40,990/- , செல்லுலார் மாடல் ரூ. 49,990 எனவும் நிர்ணயிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x