Last Updated : 10 Sep, 2019 08:08 PM

 

Published : 10 Sep 2019 08:08 PM
Last Updated : 10 Sep 2019 08:08 PM

இந்தியாவில் 5 வண்ணங்களில் வெளியாகிறது  Xiaomi MI Band 4 

செப்டம்பர் 17-ம் தேதி Xiaomi MI Band 4 இந்தியாவில் வெளியாக உள்ளது. இந்த Xiaomi MI Band 4 முதன்முதலில் சீனாவில் வெளியிடப்பட்டது. அங்கு இதன் விலை 199 சீன யுவான்கள். இந்திய மதிப்பின் படி ரூ.1,994 ஆகும். இது 5 நிறங்களில் வெளியானது. ஆரஞ்சு, ஊதா, கருப்பு, பர்கண்டி மற்றும் பழுப்பு ஆகிய 5 நிறங்களில் இந்தியாவிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.

Mi Band 3-யுடன் Mi Band 4-ன் டிஸ்ப்ளே பெரியது. வண்ண டிஸ்ப்ளே மற்றும் 16,000 வண்ண பிக்சல்கள் கொண்டது. இதன் எடை 22.1g, 0.95 அங்குல Amoled டிஸ்ப்ளே, திரை விகிதம் 120 x 240, டிஸ்ப்ளே பாதுகாப்புக்காக டிஸ்ப்ளேவின் மேல் 2.52d கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது, 135 mah பேட்டரி, 2 மணி நேரம் சார்ஜ் போட்டால் 20 நாட்கள் வரை தாங்கும். 5.0 புளூடூத் தொழில்நுட்பத்தைக் கொண்டது.

Mi Band 3 - ன் பட்டைகள் Mi Band 4- க்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். நமக்குப் பிடித்த புகைப்படங்களை திரையில் வைத்துக் கொள்ளலாம். போன் வந்தால் பேண்டின் திரையில் தெரியும். அழைப்பைத் துண்டிக்க மட்டும் தான் முடியும். மெசேஜ் நோட்டிபிகேஷன்கள் திரையில் வரும்.

சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி, ஓட்டம் மற்றும் நடைப்பயிற்சி உள்ளிட்ட உடல் செயல்பாடுகளை இதில் எளிதில் அறியலாம். இந்த பேண்டை அணிந்துகொண்டு நீச்சல் கூட அடிக்கலாம். இதில் Water Resistance இருக்கிறது.

Xiaomi MI Band 4 இந்தியாவில் ரூ.2000 முதல் ரூ.3000க்குள் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 17 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசான் தளத்திலும், MI.com மற்றும் MI Home கடைகளிலும் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x