Published : 04 Sep 2019 07:03 PM
Last Updated : 04 Sep 2019 07:03 PM

இலவச அழைப்புகள், அதிவேக இணையம் சலுகைகளுடன்  ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் செப்.5ம் தேதி அறிமுகம்

சோதனை முறையில் செயல்பாட்டில் இருந்த ஜியோ ஜிகா ஃபைபர் வரும் செப்டம்பர் 5-ம் தேதி முதல் முறைப்படி அறிமுகமாகும் என்று முகேஷ் அம்பானி அறிவித்ததற்கு இணங்க நாளை, செப்.5ம் தேதி ரிலையன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபர் அறிமுகமாகவுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு ஜியோ பைபர் பிராட்பேண்ட் இணைப்புக்கும் ரிலையன்ஸ் ஜியோ இலவச செட்டாப் பாக்ஸ்களை வழங்கவிருப்பதாக ரிலையன்ஸ் ஜியோவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.700 வாடகை முதல் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரை திட்டங்கள் இருக்கின்றன. அளவில்லா இலவச அழைப்புகள், அதிவேகமான 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையதளம், வாழ்நாள் சந்தாதாரராக இணைபவர்களுக்கு எல்இடி டிவி உள்ளிட்டவையும் வழங்கப்படுவதாக ஏற்கெனவே ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது.

ஜியோ ஜிகா ஃபைர் திட்டத்தில் குறைந்தபட்ச வாடகை ரூ.700 ஆகவும் அதிகபட்ச வாடகை ரூ.10 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கு ஏற்ப, அவர்களின் தேவைக்கு ஏற்ப, படிநிலைக்கு ஏற்ப வாடகைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஃபைபர் திட்டத்தில் வீடுகளில் இணைப்பு பெற்ற பின் இந்தியா முழுவதும் இலவசமாக மொபைல், லேண்ட் லைனில் பேச முடியும், இதன் பிராட்பேண்ட் இணையதள வேகம் 100 எம்பிபிஎஸ் ஆகவும் அதன்பின் 1 ஜிபிபிஎஸ் ஆகவும் மாறும்.

சர்வதேச அளவில் பேசுவதற்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு அளவில்லாமல் பேசுவதற்கு மாதத்துக்கு ரூ.500 செலுத்தி பேசும் திட்டம் இருக்கிறது.

2020-ம் ஆண்டில் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் புதிய திரைப்படங்கள் பார்க்கும் வசதி அறிமுகமாகிறது. இதன்படி, திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை அன்றே ஜிகா ஃபைபர் ப்ரீமியம் வாடிக்கையாளர்கள் பார்க்க முடியும்.

ஜியோ ஃபைபர் வெல்கம் ஆஃப் எனும் திட்டமும் அறிமுகமாகிறது. இதன்படி வாடிக்கையாளர்கள் ஆண்டு சந்தாவைத் தேர்வு செய்தால், அவர்களுக்கு இலவசமாக ஹெச்டி எல்இடி தொலைக்காட்சி அல்லது 4கே டிவி மற்றும் 4கே செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும்'' என்று முகேஷ் அம்பானி ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்தார்.

இதோடு டிவி செட்களிலேயே வீடியோ அழைப்பு வசதியும் செய்யப்படவுள்ளது. இந்தச் சேவைக்காக வாடிக்கையாளர் எஸ்டிபியுடன் கேமராவை இணைக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் வட்டாரம் தெரிவிப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x