

ஜெப்ரானிக்ஸ் ‘மாஸ்டர்பீஸ்’ என்ற போர்ட்டபிள் வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உள் கட்டமைக்கப்பட்டுள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 மணிநேரம் வரை தொடர்ந்து இசை கேட்கலாம். TWS அம்சத்துடன் இந்த ஸ்பீக்கர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட ஒலியின் தரம் மற்றும் ஆழமான பேஸ் இதன் சிறப்பம்சம் என ஜெப்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது.
ஒலியளவிற்கான கட்டுப்பாட்டு பொத்தான்கள், பளபளப்பான மேற்புறத்துடன் கூடிய, ஃபேப்ரிக் போன்ற வெளிப்புறத் தோற்றம், முழுமையான வயர்லெஸ் செயல்பாடு ஆகியவை இதன் அம்சங்கள். இன்னொரு ஸ்பீக்கரையும் இதனுடன் இணைத்து ஸ்ட்ரீயோ இசையையும் கேட்கலாம். மொபைலை இணைத்திருக்கும் போது, அழைப்புகளை ஏற்கும் வசதியும் உள்ளது.
ப்ளூடூத் வசதியுடன் சேர்த்து, USB/ AUX/ Micro SD, FM ரேடியோ போன்ற பிற பயன்முறைகளும் உள்ளன. இதன் விலை ரூ. 2,699