

கோடைகாலத்தை தாக்குப் பிடிக்க அனைவரும் ஏசியில் இருக்க ஆசைப்படுவார்கள். செல்லும் இடமெல்லாம் கையில் கொண்டுசெல்லும் பாக்கெட் ஏசி தற்போது அறிமுகமாகியுள்ளது.
கோடைகாலத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முறியடித்து, நாம் செல்லும் இடம் எல்லாம் கையிலேயே ஏசியைக் கொண்டு செல்லும் வகையில் மொபைல் போனை விட சிறியதாக கைக்கு அடக்கமாக ஏசி எந்திரத்தை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பாக்கெட் ஏசியுடன் டி ஷர்ட் ஒன்றைத் தருகிறார்கள். அந்த டி ஷர்ட் S, M மற்றும் L என மூன்று அளவில் தருகிறார்கள். இந்த டி-ஷர்ட்டின் பின்புறத்தில் அந்த ஏசியை வைக்கும் அளவிற்கு ஒரு பாக்கெட் இருக்கிறது.
அந்த பாக்கெட்டில் பாக்கெட் ஏசியை வைத்து டி ஷர்ட்டின் மேல் சட்டையை மாட்டிக் கொண்டால் குளிர்ச்சியான காற்று உடலில் பரவும். வெப்பத்தில் இருந்து சிறிது தப்பிக்கலாம். இந்த பாக்கெட் ஏசியை 2 மணி நேரம் சார்ஜ் செய்து பயன்படுத்தினால் ஒன்றரை மணி நேரம் வரை உபயோகப்படுத்திக் கொள்ளமுடியும்.
இதை புளூடூத் மூலம் மொபைல் போனில் இணைத்து பாக்கெட் ஏசியின் கூலிங்கை கூட்டி, குறைத்துக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். சோனி நிறுவனம் தயாரித்துள்ள இந்த பாக்கெட் ஏசி, இந்திய மதிப்பில் ரூ. 8992 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.