

மைக்ரோசாப்ட் நிறுவனம் இ-மெயில் பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில் ஐபோனில் செயல்படக்கூடிய செண்ட் எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்தச் செயலி இ-மெயில் அனுப்புவதைக் குறுஞ்செய்தி போல் கொண்டு வந்திருக்கிறது. மெயில் வடிவமைப்பில் அதன் உள்ளடக்கத்தைக் குறிக்கும் சப்ஜெக்ட் அம்சத்தை நீக்கி இதைச் சாத்தியமாக்கியுள்ளது.
இந்தச் செயலி மூலம் பயனாளிகள் தங்களுடன் மெயில் தொடர்பில் உள்ளவர்களுக்குக் குறுஞ்செய்தி போல எளிதாக மெயில் அனுப்பலாம். முதல் கட்டமாக அமெரிக்காவில் அறிமுகமாகி உள்ளது. விரைவில் மற்ற நாடுகளிலும் எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டுக்கும் வரும் என நம்பலாம்.
செயலி இணைப்பு: https://goo.gl/gXkVvn