அலர வைக்கும் அலாரம்

அலர வைக்கும் அலாரம்
Updated on
1 min read

ஸ்மார்ட் போனுக்குள் இருந்தபடி துயிலெழுப்ப உதவும் அலாரம் செயலிகள் தான் எத்தனை வகை. இப்போது அலார்மி எனும் புதியதொரு அலாரம் செயலியும் சேர்ந்திருக்கிறது. உலகிலேயே மிகவும் எரிச்சலுட்டக்கூடிய துயிலெழுப்பும் செயலி என இது தன்னை வர்ணித்துக்கொள்கிறது.

இந்த அலாரம் செயலி தினமும் காலையில் துயிலெழுப்பும் நேரத்துக்குச் சரியாக ஒலிக்கும். அந்த வகையில் இது மற்ற செயலிகள் போன்றதுதான். ஆனால் இது ஒலிக்கத் தொடங்கிய பின் இதைச் சாதாரணமாக நிறுத்திவிட முடியாது.

போனில் ஒரு ஒளிப்படத்தை எடுத்துப் பதிவேற்றிய பிறகுதான் இது மெளனமாகும். அதுவும் எப்படி தெரியுமா? அலாரம் அமைக்கும்போது நீங்கள் தேர்வு செய்து ஒளிப்படமாக சமர்ப்பித்த இடத்துக்குச் சென்று படமெடுத்தால்தான் இதை நிறுத்த முடியும். அதுவரை கத்திக்கொண்டே இருக்கும்-

அதனால் அது தன்னை எரிச்சலூட்டும் செயலி என்கிறது. பொறுப்பாக அலாரம் வைத்துவிட்டு அதைவிடப் பொறுப்பாக அதை அணைத்து விட்டு தூங்கிவிடுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: >https://goo.gl/ZDWWF

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in