Published : 20 Jul 2015 12:07 PM
Last Updated : 20 Jul 2015 12:07 PM

ஹோலோலென்ஸ் கண்ணாடி

மைக்ரோசாப்ட் நிறுவனத்தோடு கூட்டு வைத்துள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹோலோலென்ஸ் கண்ணாடியை பயன்படுத்தி மனித உடலின் அனைத்து பாகங்களையும் கண்காணிக்கலாம் என்கிறது அந்த வீடியோ.

இந்த கண்ணாடியை உடல்கூறு பயிற்சிக்கு பயன்படுத்தலாம் என்கிறது அந்த ஆய்வு. இதை அணிந்து கொண்டு எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், தசைகள், இதயம், மூளை அனைத்தையும் தனித்தனியாக கவனிக்கலாம். பல கட்ட சோதனைகளில் கண்டுபிடிக்கும் பிரச்சினைகளை இந்த கண்ணாடி அணிந்து கொண்டால் எளிதாகக் கண்டு பிடித்துவிடலாம்.

இந்த ஆராய்ச்சி நடைமுறைக்கு வந்தால் மருத்துவ அறிவியலின் புரட்சியாக இருக்கும் என்கிறது உலகம்.

அமெரிக்காவில் சூரிய மின்சாரம்

அமெரிக்காவில் குறைந்த வருமான பிரிவினருக்கு என்றே அதிபர் ஒபாமா சோலார் திட்டத்தை அறிவித்துள்ளார். குறைந்த வருமானம் கொண்டிருப்பவர்களின் வீட்டு மேற்கூரையில் சோலார் பேனல்களை அமைத்து உற்பத்தி செய்து கொள்ளலாம். இதற்காக 25 கோடி டாலர் நிதியை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வீடுகளுக்கான மின் கட்டணத்தில் 20 சதவீதம் வரை சேமிக்க முடியும். 300 மெகாவாட் வரை உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. 50,000 வீடுகளில் இப்படி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவெ அமெரிக்காவில் காப்பீடு இல்லாதவர்களுக்கு என்று ஒபாமா கேர் என்கிற இலவச காப்பீடு சேவை இருந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x