பயர்பாக்சில் ஹைலைட் வசதி

பயர்பாக்சில் ஹைலைட் வசதி
Updated on
1 min read

டெக்ஸ்ட்மார்க்கர் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் இணையத்தில் உலாவும்போது பயன்படுத்தும் இணையதளங்களில் குறிப்பிட்ட வாசகங்களை ஹைலைட் செய்து கொள்ளலாம்.

ஹைலைட் செய்ய வேண்டிய வாசகங்களை மவுஸ் மூலம் செலெக்ட் செய்து விட்டு, டெக்ஸ்ட்மார்க்கர் டூல் பாரை கிளிக் செய்தால் போதும். ஹைலைட் வசதிக்கான வண்ணத்தையும் முதலிலேயே தேர்வு செய்து கொள்ளலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வண்ணங்களையும் பயன்படுத்தலாம். பின்னணி நிறத்தையும் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது. இந்த வசதி தற்காலிகமானது தான் என்றாலும் இதை நிரந்தமாகவும் மாற்றிக்கொள்ளலாம். இவற்றை புக்மார்க்காகக்கூட மாற்றிக்கொள்ளலாம்.

விவரங்களுக்கு: https://goo.gl/FWtL7U

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in