அடுப்புக்குள் கேமரா

அடுப்புக்குள் கேமரா
Updated on
1 min read

சமையல் செய்யும்போது மைக்ரோவேவ் ஓவனுக்குள் என்ன நடக்கிறது என்பதை அப்படியே லைவ்வாக பார்ப்பதற்கு ஒரு செயலியை கண்டிபிடித்துள்ளனர் இரண்டு பொறியாளர்கள். இதற்கான செயலியை செல்போனில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

உள்ளே வைத்த பொருட்களை சரியான பதத்தில் எடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் திறந்து மூடிக் கொண்டிருக்காமல், மொபைல் செயலி மூலம் எந்த பதத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்காக மைக்ரோவேவ் ஓவனுக்குள் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு பொறியாளர்களும் ஏற்கனெவே ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள்.

சென்சார் பாண்ட்

கூகுள் நிறுவனம் பல தொழில்நுட்பங்களுக்கும் முன்னோடி என்பது தெரியும். தற்போது இன்னுமொரு புதிய தயாரிப்பை கொண்டுவர உள்ளது. கைக் கடிகாரம்போல உள்ள இந்த சாதனத்தை அணிவதன் மூலம் இதய துடிப்பு, உடல் வெப்பநிலை மற்றும் இரத்த ஓட்டம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். மருத்துவ கண்காணிப்பில் இருப்பவர்கள் அணிந்து கொண்டால், மருத்துவர்கள் நோயாளியின் உடல்நிலையை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in