

இணைய அகராதிகளுக்குக் குறைவில்லை. ஆங்கில அகராதிகளும் அநேகம் இருக்கின்றன. தமிழ் அகராதிகளும் இருக்கின்றன. இப்போது புதிதாக ஒரு இணைய அகராதி உருவாகி இருக்கிறது- சிலிக்கான் வேலி டிக்ஷனரி!
சிலிக்கான் வேலி எல்லோருக்கும் தெரியும். தொழில்நுட்ப நிறுவனங்களின் இருப்பிடம் இது. சிலிக்கான் வேலிக்கு என்று பிரத்யேக கலாச்சாரம் உண்டு. அதற்கெனத் தனி மொழிப் பிரயோகங்களும் உண்டு. இப்படி சிலிக்கான் வேலியில் புழங்கும் வார்த்தைகளுக்கும், பதங்களுக்கும் பொருள் சொல்லும் அகராதியாக இந்தத் தளம் விளங்குகிறது.
அப்படியே அகராதி நோக்கிலான விளக்கம் என்று சொல்வதற்கில்லை. கொஞ்சம் கேலியும், கிண்டலும் கலந்து சற்றே விமர்சன ரகமாக இவை அமைந்துள்ளன. ஆனால், ரசிக்கும்படி இருக்கிறது.
இணையதள முகவரி: >http://svdictionary.com/