

சாதாரணமாக திரைப்படங்களில்தான் ஹீரோக்களை நோக்கி பாயும் துப்பாக்கி குண்டுகள் அவர் மீது பாயாமல் சட்டைப் பையில் உள்ள ஏதாவது ஒரு பொருளில் பட்டு அவர் உயிர் பிழைப்பார். ஆனால் இப்போது அப்படி ஒரு சம்பவம் பிரேசிலில் நிஜமாகவே நடந்துள்ளது. பிரேசிலின் சா போலோ நகரத்தில் 24 வயதான போலீஸ்காரரை திருடன் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட போது போலீஸ்காரரின் பாக்கெட்டில் இருந்த ஸ்மார்ட்போன், குண்டை தன்னகத்தே வாங்கி தன் எஜமானரை காப்பாற்றியுள்ளது. இந்த சுவாரஸ்யமான சம்பவத்திற்கு பிறகு அந்த போலீஸ்காரர் தனது ஸ்மார்ட்போனை நன்றியுடன் பார்க்கிறாராம்.