Last Updated : 12 Jun, 2015 03:11 PM

 

Published : 12 Jun 2015 03:11 PM
Last Updated : 12 Jun 2015 03:11 PM

பாஸ்வேர்டு விதி மீறல்

பாஸ்வேர்டு பாதுகாப்பில் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் டெலி சைன் எனும் மொபைல் சேவை நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வு.

இணையவாசிகளில் ஐந்தில் ஒருவர் பாஸ்வேர்டு விதியை மீறி வருவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது இவர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தங்கள் பாஸ்வேர்டை மாற்றாமல் இருக்கிறார்கள். பாஸ்வேர்டு தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்க அவற்றை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

இதுதான் பாஸ்வேர்டு பயன்பாட்டின் பிரதான விதியாகக் கருதப்படுகிறது. அடிக்கடி மாற்றாமல் இருந்தால்கூடப் பரவாயில்லை ஆண்டுக்கணக்கில் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்துவது என்பது தாக்காளர்களின் (ஹேக்கர்) வேலையை எளிதாக்கும்.

47 சதவீதம் பேர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே பாஸ்வேர்டையே தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அது மட்டுமா, 73 சதவீத இணையக் கணக்குகள் அவற்றுக்கென பிரத்யேக பாஸ்வேர்டு இல்லாமல் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கிறது. அதாவது ஒரு இணையக் கணக்குக்குப் பயன்படுத்தும் பாஸ்வேர்டு இன்னொரு இணையக் கணக்கை இயக்கவும் பயன்படுத்தும் நிலை பரவலாக இருக்கிறது.

உதாரணத்துக்கு, இமெயிலுக்கான பாஸ்வேர்டையே இன்ஸ்டாகிராம் சேவைக்கோ அல்லது வேறு சேவைகளுக்கோ பயன்படுத்துவது. ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்துவது எளிதாக இருக்கலாம். ஆனால் தப்பித்தவறி அந்த பாஸ்வேர்டு களவாடப்பட்டால், அந்த ஒரு இணைய சேவை மட்டும் அல்லாமல் அது பயன்படுத்தப்பட்ட அனைத்து இணைய சேவைகளுக்கான கதவுகளும் தாக்காளர் வசம் வந்துவிடும். எனவேதான் கட்டாயமாக ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி பாஸ்வேர்டு தேவை என்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x