ட்விட்டர் டைரக்ட் மெசேஜில் இனி தாராளமாக எழுதலாம்: 140 கட்டுப்பாடு தளர்கிறது

ட்விட்டர் டைரக்ட் மெசேஜில் இனி தாராளமாக எழுதலாம்: 140 கட்டுப்பாடு தளர்கிறது
Updated on
1 min read

ட்விட்டரில் 140 எழுத்துக்களுக்குள் எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட உள்ளது. ஆனால் ட்வீட்களுக்கு இது பொருந்தாது. ஒருவருக்கு ஒருவர் அனுப்பிக் கொள்ளும் நேரடி தகவலுக்கு மட்டும் இந்த விதி தளர்ப்பை ஏற்படுத்துகிறது ட்விட்டர் நிர்வாகம்.

குறும்பதிவுதளமான ட்விட்டரில் பதியப்படும் பதிவுகள் அனைத்தும் 140 எழுத்துக்கள் கொண்டவையாக இருக்க வேண்டும் என்பது அதன் விதி.

இந்த நிலையில் ட்விட்டரின் தயாரிப்பு மேலாளர் சச்சின் அகர்வால், இந்த விதியை தளர்க்கும் நடவடிக்கையை கூடிய விரைவில் முடிக்க ட்விட்டரின் அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ் எனப்படும் தொழில்நுட்ப பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எனினும், இந்த தளர்வால் எவ்வித பயனும் இல்லை என்று ட்வீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். நேரடி தகவல்களுக்கு வழங்கப்பட இருக்கும் இந்த தளர்ப்பு ட்வீட்களுக்கும் வரும் காலங்களில் வழங்கப்படுவதற்கான முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்பதே ட்விட்டர்வாசிகளின் ஆதங்கமாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in