

இணையம் இசைமயமான வாழ்க்கையை அளித்திருக்கிறது. கம்ப்யூட்டரிலோ டேப்லெட்டிலோ ஸ்மார்ட் போனிலோ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பாடல்களைக் கேட்டு ரசிக்கலாம். இதற்குக் கைகொடுக்கும் இணையதளங்களும் ஏராளம் இருக்கின்றன.
ஆனால், கம்ப்யூட்டரில் கேட்டுக்கொண்டிருக்கும் அருமையான பாடலை அடுத்த அறையிலோ அல்லது தோட்டத்திலோ வேறு ஒரு சாதனத்தில் கேட்டு ரசிக்க விரும்பினால் என்ன செய்வது? கேபிள் இணைப்பு, கான்பிகரேஷன் தொல்லைகள் இல்லாமல் இதைச் சாத்தியமாக்குகிறது ஸ்டீரிம் வாட் யூ ஹியர் இணையதளம்.
இதில் உள்ள மென்பொருளை டவுன்லோடு செய்துகொண்டால் கம்ப்யூட்டரில் ஒலிக்கும் பாடலை அருகில் உள்ள எந்தச் சாதனத்திலும் கேட்கச் செய்யலாம். இசைப் பிரியர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி: >http://www.streamwhatyouhear.com/