தவறான மெயில்களை உடனே வாபஸ் பெற கூகுள் புதிய வசதி

தவறான மெயில்களை உடனே வாபஸ் பெற கூகுள் புதிய வசதி
Updated on
1 min read

பல நேரங்களில், 'அந்த இ-மெயிலை' அனுப்பியிருக்க வேண்டாமோ என நாம் யோசிப்பது உண்டு.

அந்தவகையில், தவறானது அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் என நாம் நினைக்கும் இமெயில்களை பெறுநர் பார்வைக்குச் செல்லாமல் நிறுத்திவைக்க கூகுள் வழிவகை செய்துள்ளது.

இந்த நடைமுறை கூகுளின் பரிசோதனையில் இருந்துவந்தது. தற்போது இது, ஜி-மெயில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஜி-மெயில் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் 'செட்டிங்ஸ்'-ல் சிறு மாறுதல்களைச் செய்து இந்த சேவையைப் பெறலாம்.

'undo send' (அண்டூ செண்ட்) என அழைக்கப்படும் இந்த முறையை ஜிமெயில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு இமெயிலை அனுப்பிய 30 நொடிகளுக்குள் அண்டூ செண்ட் கொடுத்துவிட்டால் குறிப்பிட்ட அந்த மெயில் சென்றடையாது.

மொபைல் போன்களில் இந்த முறை கடந்த மாதமே நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போன்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜி மெயில் இன்பாக்ஸ்-களில் 'undo send' (அண்டூ செண்ட்) ஆப்ஷன் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in