

இணையத்தில் நீங்கள் விஜயம் செய்யும் இணையப் பக்கங்களை எல்லாம் உங்கள் பிரவுசர் குறித்து வைப்பது மட்டுமல்ல சேமித்தும் வைக்கிறது.
இணைய இணைப்பு துண்டான பின்னும் ஏற்கனவே நீங்கள் விஜயம் செய்த இணையப் பக்கங்களை இந்த வசதி மூலம் பார்க்கலாம், பயன்படுத்தலாம்.
குரோம் பிரவுசரில் ஆட்டோ ரீலோட் (auto reload) அல்லது ஷோ சேவ்ட் காபி (show saved copy) கட்டளை மூலம் இந்த வசதியைப் பயன்படுத்தலாம் என ஆண்ட்ராய்டு போலீஸ் தளம் சொல்கிறது.
இந்த வசதியைப் பயன்படுத்த chrome://flags எனக் குறிப்பிட்டு மேலே சொன்ன கட்டளையை வரவைத்துச் செயல்படுத்தவும்.