

மருத்துவத்துறையில் பல்வேறு வகைகளில் ரோபோ கருவிகள் பயன்பட்டுவருகின்றன. ஆனால் மருத்துவ உதவியாளராக செயல்படுகிறது இந்த ரோபோ.
நோயாளியை இருக்கையிலிருந்து தூக்கி படுக்கையில் வைப்பது, அதுபோல படுக்கையிலிருந்து இருக்கைக்குக் கொண்டுவரும் வேலைகளைச் செய்கிறது. மேலும் மருத்துவம் செய்வதற்கு ஏற்ப நோயாளியை தயார் செய்வது என மருத்துவ உதவியாளர் மேற்கொள்ளும் பணிகளை செய்கிறது.
ஜப்பானைச் சேர்ந்த ரிகான் நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. 140 கிலோ எடை கொண்ட இந்த ரோபா 240 கிலோ எடைவரை சுமக்கும் திறன் கொண்டது.
மருத்துவரின் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் இந்த ரோபோ மருத்துவரின் கட்டளைகளைக் கேட்க அருகிலிலேயே நிற்கும். குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்க இந்த வகை ரோபோ பயன்படுத்தினால் மருத்துவர்களுக்கு பாதி வேலை மிச்சம்.
விரைவில் இந்த வகை மருத்துவ உதவியாளரை நாமும் சந்திக்கலாம்.