

ஸ்மார்ட் போன்களில் விதவிதமான வால்பேப்பர்கள் தோன்ற விரும்பினால் மியூசி (Muzei) செயலியை நாடலாம். இவை வழக்கமான வால்பேப்பர்கள் அல்ல.
ஒவ்வொன்றும் ஒரு புகழ்பெற்ற கலைப்படைப்பாகும். அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களிலிருந்து வால்பேப்பரை எடுத்துத் தருகிறது.
போனில் உள்ள ஐகான்கள் பளிச் எனத் தெரியும் வகையில் இவற்றின் தோற்றம் பின்னணியில் கலந்துவிடுகிறது. கலைப்படைப்பில் இரு முறை கிளிக் செய்தால் அதன் முழு தோற்றம் மற்றும் விவரங்களைக் காணலாம்.
மியூசி என்றால் ரஷ்ய மொழியில் அருங்காட்சியகம் என்று பொருளாம்.
ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: >https://play.google.com/store/apps/details?id=net.nurik.roman.muzei