லைக்குகளில் ஒரு சாதனை

லைக்குகளில் ஒரு சாதனை
Updated on
1 min read

டிஜிட்டல் யுகத்தில் பத்திரிகைகளின் பாடு திண்டாட்டமாக இருந்தாலும் புகழ்பெற்ற நேஷனல் ஜியாகிரபிக் இதழ் இக்காலத் தலைமுறை மத்தியிலும் பிரபலமாக இருக்கிறது. குறிப்பாக இளசுகள் புழங்குமிடமாக இருக்கும் சமூக ஊடக பரப்பில் இந்த இதழ் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த இதழின் இன்ஸ்டாகிராம் கணக்கான @natgeo 17 லட்சம் பாலோயர்களைப் பெற்றிருக்கிறது. பொதுவாக ஹாலிவுட் நட்சத்திரங்களும் மாடல் அழகிகளுமே லட்சக்கணக்கில் பாலோயர்களைப் பெறும் இன்ஸ்டாகிராமில் அதிக ஆதரவு பெற்ற பிரபலங்கள் அல்லாத கணக்குகளில் நேஷனல் ஜியாகிரபிக் டாப்பில் உள்ளது.

சமீபத்தில் இதன் இன்ஸ்டாகிராம் பக்கம் நூறு கோடி லைக்குகள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு @natgeoyourshot, @natgeoadventure ஆகிய இரண்டு புதிய இன்ஸ்டாகிராம் பக்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் கணக்கு மூலம் அனைவரும் தங்கள் ஒளிப்படங்களைச் சமர்ப்பிக்கலாம். புதிய தலைமுறை மத்தியில் @natgeo பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in