சதுரமே அழகு!

சதுரமே அழகு!
Updated on
1 min read

மைக்ரோமேக்சின் துணை நிறுவனமான யூ டெலிவென்சர்ஸ் அடுத்த போனை அறிமுகம் செய்யத் தயாராகிவிட்டது. இளசுகளைக் குறிவைக்கும் இதன் முதல் அறிமுகமான யுரேகா ஸ்மார்ட் போனைத் தொடர்ந்து யுப்ஹோரியா (Yuphoria) எனும் ரசிகர்கள் சூட்டிய பெயருடன் இந்த போன் அறிமுகமாகும் எனப் பேசப்பட்டுவந்த நிலையில் வரும் 12-ம் தேதி என இதற்கு நாளும் குறிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் மூலம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்தத் தகவலை வெளியிட்டு ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில் புதிய போனின் அம்சங்கள் ஒளிப்படத்துடன் இணையத்தில் கசிந்துள்ளது. முந்தைய மாதிரையைவிடச் சதுரமான வடிவமைப்பு இதன் சிறப்பம்சமாக இருக்கும் என்றும் Cyanogen 12 OS இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

64 பிட் பிராசஸ்ர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களுடன் 4ஜி எல்.டி.இ வசதியும் கொண்டிருக்கும் எனத் தெரியவந்துள்ளது. ஜியோமியின் சமீபத்திய மாதிரியுடன் இந்த போன் மல்லுக் கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மைக்ரோமேக்ஸ் யுனைட் 3 ஸ்மார்ட் போனையும் ஆன்லைன் மூலம் ரூ.6,569 எனும் விலையில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. 10 பிராந்திய மொழிகள் உள்ளிட்ட மொழிகளில் செயல்படும் வசதியையும் கொண்டுள்ளது.

ஆங்கிலத்தில் இருந்து பிற மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு வசதியும் இதில் இருக்கிறது. இதே போல பிற மொழிகளில் இருந்து ஆங்கிலத்தில் செய்திகளை மொழிபெயர்த்துக்கொள்ளலாமாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in