பயோ - மெட்ரிக் பாஸ்வேர்ட்

பயோ - மெட்ரிக் பாஸ்வேர்ட்
Updated on
1 min read

கைவிரல் ரேகைகளை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் நடைமுறை முக்கியமான பாதுகாப்பு விஷயங்களுக்குக் கடைபிடிக்கப்படுகிறதுதான்.

பயோ-மெட்ரிக் எனப்படும் இந்த முறை வங்கிகளிலும் முக்கிய இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. பார்க்லேஸ் வங்கி தனது நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆன்லைன் வங்கிச் சேவையைப் பயன்படுத்தும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் இந்த பயோ-மெட்ரிக் ஸ்கேனரையும் கம்ப்யூட்டரோடு இணைத்துக் கொள்ள வேண்டும். கூடுதல் பாதுகாப்புக்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுருளும் தண்ணீர் குடுவை

சுற்றுலா செல்பவர்கள் அல்லது மலை ஏற்றம் செய்பவர்களுக்கு உள்ள சிக்கல்களில் ஒன்று தண்ணீர்பாட்டில் சுமந்து செல்வது. எங்காவது தண்ணீர் கிடைக்கும் என்றாலும், அதை நம்ப முடியாது என்று தண்ணீர் பாட்டிலைச் சுமந்து செல்வார்கள். அல்லது வெறும் குடுவையாவது சுமக்க வேண்டியிருக்கும்.

அப்படி வெறும் தண்ணீர் குடுவை சுமப்பதற்கும் தீர்வு கண்டுள்ளது ஹைடாவே என்கிற நிறுவனம். கைக்குள் சுருட்டி எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்கு இந்த குடுவை உள்ளது. சட்டை பாக்கெட்டுக்குள் சுருட்டி வைத்துக் கொள்ளலாம்.

தேவையானபோது எடுத்து குடுவையாக விரித்துக் கொள்ளலாம். தாகம் தீர்ந்ததும் திரும்பவும் மடக்கி சுருட்டி வைத்துக் கொள்ளலாம்.

கான்செப்ட் பைக்

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த கான்செப்ட் பைக் தயாரிக்க திட்டம் வைத்துள்ளது. முன்புற சக்கரத்தை மூடியபடி வீல்கவரிங் உள்ளது. பின்பக்க டயர் அகலமாக உள்ளதால் மிக குறைந்த நிமிடத்திலேயே இந்த பைக் வேகமெடுக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in